மரண மாஸ் காட்டிய தமிழக முதல்வர்.! மிரண்டு போன ஆசிரியர்கள்.!!

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆரம்பத்தில் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழக அரசு, போராட்டத்தின் தீவிரம் கண்டு அதிர்ந்து போனது.

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதிமுதல் பள்ளி பொது தேர்வுகளின், செய்முறை தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்ததை உணர்ந்த தமிழக அரசு, ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

முதல்கட்டமாக எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டது. இதனால் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று தமிழக அரசு எதிர்பார்த்த நிலையில், தமிழக அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்தது. மேலும், 1000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடம் காலியானதாகவும், அந்த இடங்களில், போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியான ஆசிரியர்கள் பலரும் இன்று காலை முதல் தங்களின் பணிக்கு திரும்ப ஆரம்பித்தனர். இன்று காலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில் 95 சதவீத ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், தாங்கள் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், கடலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 85-95 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 65 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இன்று மாலை தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற திடீர் கூட்டத்திற்கு பின் வெளியான அறிவிப்பில், ”போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும், அப்போது தான் நாளை சம்பளம் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், நாளைய போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.