நான் இந்து.. அவர்கள் இல்லை! அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஆவேசம்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான ஓட்டத்தில் இந்து-அமெரிக்கரான நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன் என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கம்பர்ட் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்து-அமெரிக்கரான துளசி கம்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், துளசி கம்பர்ட் ஊடகங்கள் தொடர்ந்து காட்டும் மத வெறுப்புணர்வால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் எந்த காரணமும் இல்லாமல் விமர்சிப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் இந்திய மக்களால் ஜனநாயக முறையில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் மோடியைத் தான் சந்தித்தேன். ஆனால், ஏனோ நான் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய முறையில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடியை சந்தித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான ஓட்டத்தில் இந்து-அமெரிக்கரான நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

என்னை மட்டுமல்லாது எனது ஆதரவாளர்களை மதத்தினால் விமர்சிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் இந்தியா தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. நாட்டிற்காக நான் செய்த பணியைக் கேள்வி கேட்பவர்கள், பிற மதத் தலைவர்களைக் கேள்வி கேட்பதில்லை.

இது இரண்டு விதமான நிலைப்பாட்டை மட்டும் தான் கூறுகிறது. மத வெறுப்புணர்வு. நான் இந்து. அவர்கள் இந்துக்கள் அல்ல என்பது தான்’ என தெரிவித்துள்ளார்.