தனது எகிப்திய காதலனின் முதுகு வலிக்காக வலி மாத்திரைகள் கொண்டு போன காதலி, போதை மருந்து கடத்தியதாக சிறையில் அடைக்கப்பட, 14 மாதங்களுக்குப்பின் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து பிரித்தானியா திரும்புகிறார்.
இனி தப்பித்தவறிக்கூட விமான நிலையத்தில் கால் வைக்கமாட்டேன் என்று கூறும் அளவுக்கு பயந்திருக்கிறார் அவர்.
Laura Plummer (34) என்னும் பிரித்தானிய இளம்பெண், எகிப்திலிருக்கும் தனது காதலரான Omar Caboo முதுகு வலியால் அவதிப்படுவதை அறிந்து அவருக்கு உதவுவதாக எண்ணி வலி மாத்திரைகளுடன் எகிப்துக்கு விமானம் ஏறினார்.
எகிப்து விமான நிலையத்தில் இறங்கிய Lauraவின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவர் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டார்.
அவர் கொண்டு சென்ற Tramadol என்னும் மாத்திரை, ஹெராயின் என்னும் போதைப்பொருள் விளைவிக்கக்கூடிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், எகிப்தில் அது தடை செய்யப்பட்ட பொருளாகும்.
எனவே போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின்பேரில் Lauraவுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகமும், Lauraவின் சூற்றுலா ஏற்பாட்டாளரும், அவருக்கு Tramadol எகிப்தில் சட்ட விரோதமானது என்பது தெரியாது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதேபோல் எகிப்து இணையதளம், தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த தகவல்களை அப்டேட் செய்யாமல் இருந்ததும் வாதிடப்பட்டது.
என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம் போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை சிறையில் அடைத்தது.
போதை மருந்து கடத்தலுக்கு எகிப்து வழங்கும் தண்டனை மரணதண்டனை. வாதங்களுக்குப்பின் Lauraவின் மீதான குற்றம், வலி நிவாரணிகள் வைத்திருந்ததாக குறைக்கப்பட்டது.
கோரமான சூழல் கொண்ட கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டார் Laura. அவரது குடும்பம், Laura போதை மருந்து கடத்துபவர் அல்ல, அவர் அறியாமையால்தான் அந்த மருந்தை கொண்டு சென்றதாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
வெளியுறவு அலுவலகமும் தொடர்ந்து எகிப்து நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் 14 மாதங்கள் சிறைக்குப்பிறகு தற்போது எகிப்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது.
தனது விடுதலை குறித்து பேசிய Laura, இரண்டு வாரங்கள் சுற்றுலாவுக்காக எகிப்துக்கு வந்தேன், ஆனால் 14 மாதங்கள் சிறைக்குப்பின் வீட்டுக்கு போகிறேன்.
வீட்டுக்குப் போவதில் மகிழ்ச்சி, ஆனால் இனி விமான நிலையம் பக்கம் கூட கால் வைக்க மாட்டேன் என்கிறார் Laura.






