ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில் நாகர்கோவிலில் உள்ள சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, சென்னையை சேர்ந்த தொழிலதிரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பிரிவுக்கு பிறகு மகன் வேத், குடும்பம் மற்றும் திரைப்படம் என கவனம் செலுத்தி வந்தவர் கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்.
கடந்த மாதம் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பிப்ரவரி 10ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
மறுமண பத்திரிக்கையை தனது தாய் லதா ரஜினிகாந்துடன் திருப்பதி ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்து பூஜை செய்த சௌந்தர்யா, தற்போது நாகர்கோவிலில் உள்ள சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.






