அமெரிக்காவில் பெற்றோர், காதலி உட்பட ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இளைஞரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
Louisiana மாகாணத்தை சேர்ந்தவர் டகோடா தெராய்ட் (21). இவர் தனது வீட்டில் இருந்த தந்தை கெய்த் (50) மற்றும் தாய் எலிசபெத் (50) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து நேராக தனது காதலி சம்மர் (20) வீட்டுக்கு சென்று அவரையும் சம்மரின் தந்தை பில்லி (43) மற்றும் சகோதரர் டானர் (17) ஆகியோரையும் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இப்படி சைக்கோத்தனமாக டகோடா இத்தனை பேரை கொலை செய்ததற்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை.
ஆனால் சமீபத்தில் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையில் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது தெரியவந்தது.
இதோடு அடிக்கடி வீட்டில் டகோடா கத்தி கொண்டு இருப்பார் எனவும் சமூகவலைதளங்களில் கோபமான பதிவுகளை போடுவார் எனவும் தெரிகிறது.
பொலிசார் கூறுகையில், டகோடா மிகவும் ஆபத்தானவன், அவன் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்துள்ளான்.
அவனை யாராவது நெருங்கினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.
டகோடாவை முழுவீச்சில் தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.