61 வருடங்களாக பாசப்போராட்டம் நடத்திய பெண்: 81 வயதில் நடந்த அதிசயம்

அயர்லாந்தை சேர்ந்த 81 வயதான பெண்மணி, 61 வருட தேடுதலுக்கு பின் தன்னுடைய 103 வயது தாயை உயிருடன் கண்டுபிடித்துள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த Eileen Macken என்கிற 81 வயது பெண், தன்னுடைய 2 வயதிலிருந்தே, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர ஆரம்பித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால், தாயை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

19 வயது முதல் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தாயை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இவருக்கு ரொனால்டோ என்கிற கணவரும், இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

ரத்த உறவு யாரையாவது சந்தித்த விட வேண்டும் என்ற எண்ணத்தில், ரேடியோ ஒன்றின் உதவியை நாடியுள்ளார். அதன் பலனாக, தன்னுடைய சந்ததியை சேர்ந்த தூரத்து உறவினரின் அறிமுகம் கிடைத்தது.

பின்னர் மீண்டும் ரேடியோவில் தோன்றிய Eileen, 61 வருட தேடுதலின் பலனாக தாயை கண்டுபிடித்துவிட்டேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நான் அவரிடம் செல்போனில் பேசினேன். ஆனால் அவருக்கு காது கேட்கவில்லை என கூறினார். நான் விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். ஒரு மலையின் உச்சியில் நின்று நான் அனாதையில்லை என கூச்சலிடம் போகிறேன் என தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தன்னுடைய தாய்க்கு தற்போது 103 வயது நடந்துகொண்டிருப்பதாகவும், விரைவில் 104 வயதை அடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.