ஆணவக்கொலையால் தனது கணவனை இழந்து தவிக்கும் இளம்பெண்!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்தவர் பெருமாள பிரனாய், இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். மேலும் இதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அம்ருதா. ஆதிக்க சமூகத்தை சேர்ந்த அம்ருதாவும், பிரனாயும் பள்ளிகாலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 14ம் தேதி கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதாவை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்பிய நேரத்தில் அம்ருதாவின் தந்தை ஏற்பாடு செய்த கூலிப்படையினரால் கழுத்தில் வெட்டப்பட்டு மனைவியின் கண்முன்னே துடிக்க துடிக்க உயிரிழந்தார்.

இந்த ஆணவ கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மேலும் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது அம்ருதாவிற்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அம்ருதா கூறுகையில், பிரனாய் என்னை மிகவும் நேசிக்கிறான். அதனால் மீண்டும் எனக்கு மகனாக பிறந்து என்னுடன் சேர்ந்துவிட்டான் என கூறியுள்ளார்.