இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கள்ளத் தோணியில் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை நுரட்டவ் மன்னார் நகரம் மோட்டார் கடைத் தெருவைச் சேர்ந்தவர் சின்னகருப்பையா மகன் தாமரைக் கண்ணன் (42).
இவரது தங்கை வசுமதி, கணவர் முரளிதரனுடன் மதுரை அம்பலகுளத்தில் வசித்து வருகிறார். முரளிதரனின் தந்தை முனியாண்டி கடந்த மாதம் 26ம் தேதி இறந்து விட்டார்.
அவரது 30வது நாள் நிகழ்ச்சி வியாழனன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தாமரைக் கண்ணன், இலங்கையில் இருந்து கள்ளத் தோணி மூலம் தூத்துக்குடி வந்துள்ளார்.
தாளமுத்துநகர் சிலோன் காலனியில் உள்ள அகதிகள் முகாமில் முனியாண்டி மகன் மூர்த்தி என்பவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.
பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி கள்ளத்தோணியில் வந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






