உலகம் முழுவதும் துப்பாக்கி முனையில் கொலை, கொள்ளை சம்பங்கள் நடந்து வந்தாலும், அன்னம் இந்தியாவை பொறுத்தவரை துப்பாக்கி முனையில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் என்பது அரிதிலும் அரிது.
இந்தியாவில் தனி நபர் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. முக்கிய பிரபலங்கள் மட்டுமே தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை நம் இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியுள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது தலைதூக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு ஒரு துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமுட்டம் பகுதியில் நேற்றிரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேரை, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
காலில் குண்டடி பட்ட நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் சண்முகம் அந்த கொள்ளையர்களிடம் இருந்து தப்பியோடியதால் அவரின் உயிர் தப்பியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மேற்பார்வையாளர் சண்முகம் (40), விற்பனையாளர் லட்சுமணன் (42) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கொள்ளையர்களிடம் இருந்து ரூபாய் 3 லட்சம் பணத்தை காலில் குண்டு பட்ட காயத்துடன் மேற்பார்வையாளர் சண்முகம் தப்பித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 கொள்ளையர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






