சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற கோர விபத்து

தம்புள்ளை – குருநாகல் வீதியில் பாரவூர்தி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் 05 பேர் காயமடைந்து கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன்னர் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.பாரவூர்தியின் அதிவேகம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பேருந்தில் பயணித்த 05 பேரே இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.