தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சிவகாசி, சென்னை-28 உள்பட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்தார்.
மேலும் சௌந்தர்யா கோவா படத்தை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தையும், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கியுள்ளார்.
சௌந்தர்யாவிற்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்று வேத் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா அஸ்வினிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தற்போது தொழில் அதிபர் வணங்காமுடியின் மகனான விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் அடுத்த மாதம் பிப்ரவரி 10-ந் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடைபெறவுள்ளது . இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்துகொள்ளவுள்ளனர்.






