இயற்கையின் அதிசயத்தில் பனி நீர்வீழ்ச்சி.!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான குளிரானது நிலவி வருகிறது., இதன் காரணமாக சாலைகளில் மஞ்சு பனி சூழ்ந்தும்., மலை பிரதேசங்களில் பொழியும் பனியின் காரணமாக உறைநிலையில் மக்கள் பல துன்பங்களையும்., அந்தந்த சூழ்நிலையை கொண்டாடியும் வருகின்றனர்.

அந்த வகையில்., சீன நாட்டில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடுமையான பனியானது பொலிந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைத்துள்ள ஷாண்டாங் மலைப்பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு மேலும் பல அழகை மெருகேற்றியுள்ளது.

அங்கு இருக்கும் நீர் வீழ்ச்சிகள் அனைத்தும் உறைபனியின் காரணமாக பனிவீழ்ச்சியாக மாறி காண்போர்களின் கண்ணிற்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. தொடர்ந்து குறைந்த வெப்ப நிலைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக அங்கிருக்கும் பெரும்பான்மையான நீர்வீழ்ச்சிகள் உறைபனியால் சூழப்பட்டு உறைந்துள்ளது.

நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீர்கசிவுகளும் உடனுக்குடன் தொடர்ந்து உறைந்து காண்போர்களை வியப்படைய செய்துள்ளது., இதன் காரணமாக நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் வெள்ளியினை போலவே காட்சியளிக்கிறது.