கரும்புலி தாக்குதலில் இருந்து ராஜபக்ச குடும்பமே தப்பியது… அதிலொருவர் ஜனாதிபதி வேட்பாளரானால் என்ன?: மஹிந்த கேட்கிறார்!

தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நடாத்திய தாக்குதலில் இருந்து ராஜபக்ஸ குடும்பம் மயிாிழையில் தப்பியது. எனவே அந்த குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளா் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை. என எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாா்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டை தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து மீட்டெடுக்க ராஜபக்ச குடும்பம் அயராது உழைத்தது.

தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் இருந்துகூட ராஜபக்ச குடும்பம் மயிரிழையில் தப்பியது. ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. நாட்டை மீட்டெடுக்கவே பாடுபட்டது.

இந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை. வெற்றிதான் எமது இலக்கு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இப்போதைக்குக் கூறமாட்டோம்.

எனினும், வெற்றியை உறுதிப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நாம் களமிறக்குவோம். நாம் முன்னேற்றம் அடைய செய்த நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கும் ரணில் தரப்பினரை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்“ என குறிப்பிட்டுள்ளார்.