உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யனம்பட்டியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அரவிந்த் (25). உசிலம்பட்டியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ள இவருக்கும், அதே ஊரை சோ்ந்த பால்பாண்டி என்பவரது மகள் அபிநயா (22) விற்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், இவா்களுக்கு வருண்தேவ் (3) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் அரவிந்த் வெளியே சென்றுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அபிநயா, கணவர் வீட்டில் இல்லாத நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உசிலம்பட்டி நகா் போலீசார் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பாிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.






