மீன் மசாஜ் செய்த பெண்! ஒரு மாதம் கழித்து நடந்தது என்ன தெரியுமா?

பெரும்பாலான அழகு நிலையங்களில் கால்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய ஒரு தொட்டியில் நீரை நிரப்பி அதில் மீனை விட்டு, நம் கால்களை தண்ணீரில் ஊற வைப்பார்கள். அந்த மீன்கள் நம் கல்களில் உள்ள அழுக்கு, பக்டீரியா போன்றவற்றை நீக்கி பொலிவுறச் செய்யும். இதற்காகவே பலர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள்.

இப்படி சென்ற இளம் பெண் ஒருவரின் நகங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சரியாக ஒரு மாதம் கழித்து அவர்களின் கால் நகங்கள் பாதிக்கப்பட்டு உதிர்ந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மீன்களை பயன்படுத்தி கால்களுக்கு மசாஜ் செய்ததால் ஒவ்வாமை காரணமாக கால் நகங்கள் உதிர்ந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மீன் ஸ்பா அழகு நிலையங்களில் உள்ள மீன்கள் தினம்தோறும் பல்வேறு நபர்களின் கால்களில் உள்ள அழுக்குகளை தின்று சுத்தம் செய்கின்றன. மீன்கள் இருக்கும் தண்ணீரையும் உடனுக்குடன் மாற்றி சுத்தப்படுத்துவது இல்லை.

எனவே, இதுபோன்ற நோய் தாக்கிய நபரின் கால்களை மீன்கள் சுத்தம் செய்துவிட்டு அடுத்தவரின் கால்களையும் அதே மீன்கள் சுத்தம் செய்கையில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் கிருமிகள் பரவி இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.