ஆத்திரமடைந்த கணவன்..நேர்ந்த விபரீத சம்பவம்!

தமிழகத்தில் மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காத ஆத்திரத்தில் 4 மாதக் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோட்டிக்குப்பத்தைச் சேர்ந்த மதியழகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காணும் பொங்கல் அன்று மதியழகன் தனது மனைவி பொன்னியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

பொன்னி பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மதியழகன், தனது நான்கு மாத பெண் குழந்தையான மீராவை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில் குழந்தை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மதியழகனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.