வட கொரிய அதிபரான, கிம் ஜோங் உன்னின் காம லீலைகள் எல்லாம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவருடைய அந்தரங்கத்தைக் கேட்டு, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
தன்னை யாரும், நெருங்க முடியாத அளவிற்கு, தன்னை ஒரு அபாயகரமானவன், என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள வட கொரிய அதிபரால், அந்த நாட்டில் உள்ள இளம் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவருக்கு, அழகிய கால்கள் உடைய பெண்களைத் தான் பிடிக்குமாம். அதனால், அதிபருடைய உல்லாசப்படை, அழகிய கால்களை உடைய பெண்களையே தேர்வு செய்கிறது. அதனால் தான், வட கொரிய நாட்டு ராணுவ பெண்களுக்கு, கால்கள் தெரியும் படி உடை கொடுக்கப் பட்டுள்ளது. இவர்களின் கால் அழகினை அதிபர் ரசிப்பதற்காகவே, சிறப்பு நடைப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
வட கொரிய அதிபரின் இந்தக் காம லீலைகள், அவருடைய மனைவிக்கு கூட தெரியாது, என்று இவரது அந்தரங்கத்தை போட்டு உடைத்த ஹீ யியான் கூறி உள்ளார்.
பள்ளியில் இருந்து, அதிபருக்காக கடத்தி வரப்படும் பெண் குழந்தைகள், அதன் பிறகு, அவர்களின் பெற்றோரையோ, உறவினர்களையோ தொடர்பு கொள்ளவே முடியாது. எவ்வளவு பெண்களை, எந்தெந்த அரண்மனையில் வைத்திருக்கிறார். எப்போது எந்த அரண்மனைக்குச் செல்வார்? என்பது கூட யாருக்கும் தெரியாது.
இரண்டு கோடி மக்கள் வட கொரியாவில் வறுமையின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் வேளையில், அந்த நாட்டு அதிபர், கற்கால கிரேக்க, எகிப்து மன்னர்களைப் போல, உலக உல்லாச நாயகனாக, வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கேட்டால், அணு ஆயுதத்தை வீசி விடுவாரோ, என்ற அச்சத்தில் அனைத்து நாடுகளும் உள்ளன.
இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?






