அண்ணன் மனைவியுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த தம்பி! நடந்த விபரீதம்!

தமிழகத்தில் அண்ணன் மனைவியுடன் தம்பி தொடர்பு வைத்திருந்த நிலையில், அண்ணன் அவரின் தந்தையை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து.

விவசாயியான இவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது மகனுக்கு திருமணம் முடிந்து மனைவிகள் உள்ள நிலையில், இரண்டாவது மகனின் மனைவிக்கும், மூன்றாவது மகனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த உண்மை அறிந்து ஆத்திரத்தில் இருந்த இரண்டாவது மகன் இது குறித்து தந்தையிடம் கடந்த சில நாட்களாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்த பிரச்சனை பெரியதாக மாறியதால், ஆத்திரமடைந்த செல்லக்கண்ணு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தையை வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால் விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு செல்லக்கண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.