நடிகை ஸ்ரீதேவி இறந்து கிடந்த குறித்த காட்சி: கணவர் போனி நோட்டீஸ்

கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் Sridevi Bungalow.

இந்த படத்தை Prasanth Mambully இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் வைத்து குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார்.

தற்போது, வெளியான டீசரிலும் நடிகை பிரியா பிரகாஷ் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவத்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குநருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குநர் கூறியுள்ளார்.