மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ஏனைய மூவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர்.முச்சகரவண்டி இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதிக்கு வந்தடைந்த போது, அந்த நாற்சந்திக்கு மூன்று பக்கங்களாலும் இருந்து வந்த முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதின.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நான்கு பேர் படுகாயமடைந்தனர். எதிரே வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.