திருச்சி ரயில் நிலையத்தில் பொலிஸ் காதல் ஜோடியினர் அனைவர் முன்னிலையிலும் கட்டிபுரண்டு சண்டையிட்டுள்ளனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெளியே ரயில்வே பாதுகாப்பு படையில் பொலிசாக இருப்பவர் குமார், அதே போன்று ஜோதிகாவும் பொலிசாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. போனில் அவ்வப்போது பேசி காதல் வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 5ம் தேதி மதியம் குமார், ஜோதிகாவுக்கு போன் செய்தார். ஆனால், ஒரு மணி நேரமாக தொடர்பு கொண்டும் ஜோதிகா போனை எடுக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஜோதிகா போனை எடுத்து பேசியுள்ளார்.
தனக்கு இரவுப்பணி என்றும், இரவு ரயில் நிலையம் வா பேசிக்கொள்வோம் என ஜோதிகா கூறியுள்ளார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு குமார், போதையில் ரயில் நிலையம் வந்து ஜோதிகாவுக்கு சந்தித்துள்ளார்.
ஏன் 1 மணி நேரமாக போனை எடுக்கவில்லை, அப்படி யாரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என கேட்டுள்ளார். ‘‘நீ என் புருஷனா, என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறாய்’’ என ஜோதிகா கேட்க, இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஒருவரையொருவர் கட்டிப்புரண்டு சண்டையை கிழித்துக்கொண்டனர்.
பொதுமக்கள் முன்னிலையில் பொலிசாரே கட்டிப்புரண்டு சண்டையிடுவதை அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த களேபரத்தில் ரயில்வே பொலிசாக இருந்த எஸ்.ஐ. வெளியே ஓடிவந்து இருவரையும் விலக்கி விட்டார்.
இதுதொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.






