சொந்த தாயாரின் மகிழ்ச்சிக்காக 10 வயது சிறுமி எடுத்த முடிவு!

மெக்சிகோ நாட்டில் 10 வயது சிறுமி ஒருவர் தமது தாயார் உலகில் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.

மெக்சிகோ நாட்டில் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்று el Dia de Reyes. இந்த விழாவில் ஒவ்வொருக்கு ஒருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஜனவரி 6-ஆம் திகதி அன்று குறித்த விழாவானது களைகட்டியிருந்த நிலையில் உள்ளூர் நேரப்படி சுமார் 10.18 மணியளவில் சிறுமி ஒருவர் தாம் தூக்கிட்டு தற்கொலை செய்ய இருப்பதாக தொலைபேசியில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

மட்டுமின்றி அவர் எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில் தாம் தமது தாயாருக்கு அளிக்கும் உயரிய பரிசு இதுவென குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது நிரூபணமானது.

தமது தந்தை பிரிந்து சென்றதால் ஏற்பட்ட வலியில் இருந்து தமது தாயாரை மகிழ்விக்கவே இந்த முடிவு எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.