அமெரிக்காவில் இருந்து வந்த அழைப்பு மணி.! அலறியடித்து ஓடிய மோடி.!!

இந்தியாவின் பாரத பிரதமர் மோடியும் – அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று மாலையளவில் அலைபேசியில் தொடர்பு கொண்டனர். வருடத்தின் முதல் முறையாக இருபெரும் தலைவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும்., இந்தியா – அமெரிக்காவின் நல்லுறவானது கடந்த வருடத்தில் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக கூறி மகிழ்ச்சியடைந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையும்., இந்தியா – அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பேச்சுவார்த்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு உதவியதாக இருந்ததாக கூறினார்.

இதன் மூலமாக நாட்டின் பாதுகாப்புத்துறை., பயங்கரவாத ஒழிப்பு துறை மற்றும் எரிசக்தி துறை போன்ற பல்வேறு துறைகள் முன்னேற்றம் அடைந்ததாகவும்., இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இணக்க சூழலானது நிலவியதை குறிப்பிட்டு மகிழ்ந்தனர்.

இரு நாடுகளில் உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வருடத்திலும் நட்புறவுடன் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.