முறையாக வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் மைத்திரி அதிரடி!

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

யாரும் இவரது பெயரை உச்சரிக்காத நேரத்தில் இன் நியமனம் ஜனாதிபதியால் அதிரடியாக இடம் பெற்றுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.