ரஜினி மக்கள் மன்றத்தில் திடீர் அகால மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரஜினி இரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். அதன் பின்னர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்பதை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்று மாற்றினார். ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். அந்தவகையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் அவர்கள் தன்னுடைய கண்களை தானமாக வழங்கியதற்கான விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட செயலாளர் மகேந்திரன் அவர்களிடம் வழங்கினார்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மிகப்பெரிய அளவிலான இரத்ததான முகாமை நடத்தி காட்டினார் மகேந்திரன். இப்படி பல சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், தர்மபுரி ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் மகேந்திரன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிருஷ்ணகிரி அருகில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தர்மபுரி மாவட்ட மக்கள் மன்ற பொறுப்பாளர்களுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சக மக்கள் மன்ற நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.