டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த பகுதியான சுதர்ஷன் பூங்கா நகரில் இரண்டு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மின் விசிறிகள் தயாரிக்கும் ஆலையில், மின் விசிறிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. அதில் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவலளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கிருந்த 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆச்சார்யா பிக்சு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய7 பேர் பலியாகினர்.மேலும் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக கவலைக்குரிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சப்தர்ஜங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






