வருகிற ஜனவரி 15-ம் தேதி முதல் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 2 சக்கர வாகன ஓட்டிகளுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்டுகளைசெய்யவோ, விற்கவோ மற்றும் பயன்படுத்தவோ கூடாது என அனைத்து விதத்திலும் தடை விதிக்கப்படுகிறது.
ISI தரச் சான்றிதழ் இல்லாத ஹெல்மட்டுகளை விற்பனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் மற்றும் 2ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த புதிய உத்தரவு வருகிற ஜனவரி 15 முதல் அமலாகும். இந்த உத்தரவு படி, ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் ஒரு ஹெல்மட்டுக்கான அதிகப்பட்ச எடையை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோ ஆகக் குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






