சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை.!

தமிழகத்தில் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்க தமிழக அரசு முடிவு செய்து இருந்த நிலையில், 5 ஆண்டுகள் குடியிருந்தாலே இலவச வீட்டு மனை வழங்கவும், அரசின் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்னும் ஆறு மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில் தெரிவித்திருப்பதாவது, ஊரகப் பகுதிகளில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகால குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமகாரர்களை அகற்றுதல் மற்றும் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா மறு குடியமர்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி,
* புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும்.
* இதற்காக தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இன்னும் ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனை திட்டத்தை அமல்படுத்தபடும். என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக அரசின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 1,26,066 இடங்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கான பட்டா வரன்முறை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.