தந்தை மீதே புகார் கூறிய சிறுமி.. அவருக்கு கிடைத்த சூப்பரான பரிசு தெரியுமா?

தமிழகத்தில் கழிவறை கட்டித்தரவில்லை என தந்தை மீதே புகார் கூறிய 7 வயது சிறுமிக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூரின் ஆம்பூரை சேர்ந்தவர் இஸ்ஹானுல்லா, இவரது மகள் ஹனீப்பரா ஜாரா, இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இவர்களது வீட்டில் கழிவறை கிடையாது, வகுப்பில் முதல் மாணவியாக வந்தால் கழிவறை கட்டித்தருவதாக தந்தை கூறியதால் கஷ்டப்பட்டு படித்து முதல் ரேங்க் வாங்கினார்.

ஆனாலும் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி இஸ்ஹானுல்லா, கழிவறை கட்ட தாமதிக்கவே துணிச்சலுடன் பொலிசில் புகார் அளித்தார் ஜாரா.

இச்செய்தி வைரலாக பரவ பலரும் ஜாராவுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர், உடனடியாக கழிவறை கட்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டார்.

இதன்படி ஒரேநாளில் கழிவறையும் கட்டப்பட்டு விட்டது, இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கி.வீரமணி ஜாராவை அழைத்து பாராட்டியதுடன், பரிசு ஒன்றையும் வழங்கினார்.

அதாவது மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் வீடு ஒன்றை கட்டித்தர உத்தரவு வழங்கினார்.