1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பில் உண்ணாவிரதம் இருந்த இளைஞரின் அழைப்பை ஏற்றுக்கொண்டே, உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களை சிரேஸ்ட ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பு கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்பாக நான்கு இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினை மலையகத்தை சேர்ந்த அரசியல் வாதிகளினால் ஏவப்பட்ட சிலர் குழப்ப முற்பட்ட போதிலும், சிரேஸ்ட ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா மிகவும் நிதானமாக செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களில் ஒருவரான உதயகுமார் என்பவர் விடுத்த அழைப்புக்கு அமையவே சிரேஸ்ட ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
எனினும், எந்த அரசியல் வாதிகளும் வராத போது ஸ்ரீரங்கா மட்டும் ஏன் வந்தார் என கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது, உண்ணாவிரதம் இருந்து இளைஞர் எழுந்து நான் தான் ரங்கா அண்ணாவை வரச்சொன்னேன் என்றார்.
அத்துடன், ஏனைய ஊடகவியலாளர்கள் வரமுடியுமாக இருந்தால் ஏன் ரங்கா அண்ணா வரமுடியாது எனவும், ஏனைய ஊடகவியலாளர்கள் போன்று ரங்கா அண்ணாவையும் அழைத்தது உண்மை எனவும் கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் உங்களுடைய அரசியல் பிரச்சினைகளை பேச வேண்டாம் எனவும் உண்ணாவிரதம் இருந்த உதயகுமார் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் குழு 24 சிரேஸ்ட ஊடகவியலாளர் ஸ்ரீரங்காவின் வழிகாட்டலில் மாபொரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டம் மாபெரும் வெற்றியடைந்திருந்தது.
அதனை போன்று நாங்களும் போராட்டம் நடத்தியிருக்கின்றோம் என்பதை காட்டுவதற்கு இந்த உண்ணாவிரத போராட்டத்தை, சில தரப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றார்கள்.
எனினும், இறுதியில் அந்த முயற்சி படுதோல்வி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






