பாஜக மாபெரும் வெற்றி.! சோகத்தில் இருந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில்.!!

நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில், பாஜக ஒரு மாநிலத்தையும் கைப்பற்றாமல் கோட்டைவிட்டது. காங்கிரஸ் 3 மாநிலங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.19 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில், முதல் மூன்று சுற்றுகள் முடிவில் பாஜகவின் கன்வார்ஜி பவாலியா 2700 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

தற்போது பாஜக வேட்பாளராக இருக்கும் கன்வார்ஜி பவாலியா, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். குஜராத் மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜஸ்டன் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்று விலகி பாஜகவில் இணைந்த அவர், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனகாரணமாகவே தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

5 மாநிலங்களில் தோல்வியடைந்த பாஜகவிற்கு, இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது பெரும் நம்பிக்கையை தரும். ஒரு வேலை இந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி பெற்றால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்ததாகவும், மோடி அலை ஓய்ந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய வழி வகுக்காமல் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.

ஆம், வாக்கு எண்ணிக்கையின் 17 வது சுற்று முடிவிலேயே தனது வெற்றியை உறுதி செய்தார் பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அவ்சார் நாக்கியாவை, 19 ஆயிரத்து 979 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.