தனது மனைவியின் நடிப்பை வெகுவாக பாராட்டிய கோஹ்லி!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பை பெரிதும் பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ஜீரோ எனும் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை அனுஷ்காவின் கணவரும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவருமான விராட் கோஹ்லி பார்த்துள்ளார்.

மனைவி அனுஷ்காவின் நடிப்பு அவரை வெகுவாக கவர்ந்ததைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘ஜீரோ திரைப்படம் பார்த்தேன். அதில் பொழுதுபோக்கு என்னை கவர்ந்தது.

அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தனர். அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பை மிகவும் நேசித்தேன். ஏனெனில், மிகவும் சவாலான பாத்திரத்தை அவர் செய்திருப்பதாக உணர்ந்தேன். அவர் மிக சிறப்பானவர்’ என தெரிவித்துள்ளார்.