அதிரடி மன்னன் யுவராஜ் சிங்கை., 1 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்த அணி!!

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தொடங்கிய இந்த ஏலத்தில் இதுவரை யாரெல்லாம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்திய வீரர்கள் மனோஜ் திவாரியும், புஜாராவும் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த சிவம் டுபேவை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அவரின் அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரு அணி ரூ. 5 கோடி ரூபாய் அவரை ஏலம் எடுத்தது.

இதுவரை முதல் சுற்று ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்தேவ் உனத்கதை ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மோகித் சர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* டெல்லி கேபிடள்ஸ் அணி, அக்‌ஷர் படேலை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* கொல்கத்தா அணி, கார்லோஸ் பிராத்வெயிடை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முகமது ஷமி ரூ. 4.80 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிகோல்ஸ் பூரனை ரூ. 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* பெங்களூரு அணி, சிம்ரான் ஹேட்மேயரை ரூ. 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மோகித் சர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில், அதிரடி மன்னன் யுரேஜ் சிங்கை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்காமல் இருந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய வீரர் யுவராஜ் சிங்கை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.