தம்புள்ள- களுந்தாவ பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்தில் விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாத்தளை நாகஸ்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான குறித்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நபர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவித்து, அவரது நண்பர்கள் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர்.