குளித்து கொண்டிருந்த பெண்ணை, நடுதெருவுக்கு இழுத்து வந்த அதிமுக பிரமுகர்!

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளது. மேலும் பள்ளி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு தாயும், மக்களும் தங்களின் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்து காப்பாற்றினார்.

போலீசார் விசாரணையில், தீக்குளிக்க முயன்றது ஆயிஷா என்பதும் அவர் மகள் ஸ்வேதாஸ்ரீ என்பதும் தெரியவந்தது. இது குறித்து தீக்குளிக்க முயன்ற தாய் ஆயிஷா செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், ”என் மகள் ஸ்வேதா ஸ்ரீயை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால், அதனை நான் தட்டிக்கேட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக 33வது வட்ட பிரதிநிதி இளங்கோ, அவரின் மனைவி முத்துமாரி மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோர், கடந்த 14ம்தேதி நான் வீட்டில் குளித்து கொண்டு இருக்கும் போது என்னை நிர்வாணமாக நடு தெருவுக்கு இழுத்து சென்று, பொதுமக்கள் முன்னிலையில் என்னை மாண்பங்கப்படுத்திவிட்டனர்.

இது குறித்து நான் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அவர்கள் என்னை மீண்டும் தாக்கினர். வேறு வழியின்றி ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததாக ” தெரிவித்துள்ளார்.