இரயிலில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ்நகர், சுபாஷ் தெகிடி தெருவை சார்ந்தவர் சஞ்சீவன் (47)., இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் சஞ்சனா (20)., சஞ்சனா நவி மும்பையில் இருக்கும் கல்லூரியில் நர்சிங் பயின்று வருகிறார்.

இவர் தினமும் இரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்., அந்த வகையில்., நேற்று மாணவி காலை 10 மணியளவில் உல்லாஸ்நகரில் இருந்து சி.எஸ்.எம்.டி நோக்கி விரைவு இரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.

இரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக படியில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட போது., சில நிமிடங்களில் கைப்பிடி தவறி இரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இதனை கண்ட இரயில் பயணிகள் சம்பவம் குறித்து இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே காவல் துறையினர்., தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய அவரை உடனடியாக மெட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் மாணவியை சோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.