பாலஸ்தீனிய பீலே என ரசிகர்களால் அழைக்கப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல் – ஓய்பெய்த் உயிரிழந்தார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உதவிக்காக சுலைமான் காத்திருந்த நிவாரண முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீன கால்பந்த சங்கம் அறிவித்துள்ளது.







