கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

இன்றைய ஜோதிட பகுதியில் ஒரு சில பலன்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஜோதிடர் அ.மோகன்ராஜ் வெளியிட்ட பலன்கள்:

*ஒரே லக்னம் உடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யலாம்.

*லக்னத்திற்கு 7-ல் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் கேது இருப்பவர்களின் பொது பலன்கள்:

  • விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்
  • பிடிவாத குணம் கொண்டவர்கள்.
  • நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

* கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

* பிறந்தநாளன்று திருமணம் செய்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

* கணவரின் பற்கள் விழுவது போல் ஒரு பெண் கனவு கண்டால், எதிர்பாராத பொருள் வரவிற்கான சூழல் உண்டாகும்.

* பூனையை கனவில் கண்டால், சுப முயற்சிகள் கைக்கூடும்.

* சிம்ம ராசியில் சுக்கிரன் இருப்பவர்களுக்கான பொது பலன்கள்:

  • சங்கீதத்தில் ஆர்வம் உடையவர்கள்.
  • எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.
  • இறை நம்பிக்கை உடையவர்கள்.
  • இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.