கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான பிளாஸ்டிக் குகை நடைபாதை, மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. இதை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே களைகட்டத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தின் ப்யூட் எனும் இடத்தில் அமைந்துள்ள பிரபல ‘சப்வே’ ஓட்டல் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகவும், குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், வண்ணமயமான பிளாஸ்டிக் குகை நடைபாதை ஒன்றை அமைத்துள்ளது. 230 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதைதான் உலகிலேயே மிக நீளமான பிளாஸ்டிக் குகை நடைபாதை என்ற பெருமையை பெற்றுள்ளது. குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக அமைந்துள்ள இந்த நடைபாதையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் சுற்றப்பட்டுள்ள மின் வயர்களின் நீளம் மட்டும் 9 கிலோ மீட்டர் நீளம். கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் சுரங்க பாதை அங்கு வரும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.






