இணையத்தில் தன்னுடைய சாதியை தேடியவர்களுக்கு நடிகை ரித்விகா ட்விட்டரில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் நடிகர் கலையரசனுக்கு, மனைவியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா. மேலும் அவர் கபாலி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன்பின் அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் ரித்விகா என்ன சாதி என்று இணையத்தில் அதிகமாக தேடியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அதிர்ச்சி அடைந்த ரித்விகா இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..
— Riythvika✨ (@Riythvika) 29 November 2018
அதில், “ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா” என்று கூறியுள்ளார்.






