ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை நாங்கள் ஆதரிப்போம் என்பதை ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐந்தாம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மூன்றாம் திகதி நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.






