12 வருடங்களுக்கு முன் ஒரு இரவில் சந்தித்த தன்னுடைய தோழியை கண்டுபிடித்து தருமாறு, ட்விட்டரில் கோரிக்கை விடுத்த மாணவிக்கு அடுத்த 11 மணி நேரங்களிலே ஆச்சர்ய நிகழ்வு நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த பிரையன்னா க்ரை என்ற 19 வயது மாணவி தன்னுடிய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறுமியுடன் இருக்கு புகைப்படத்தை பதிவிட்டு, அவரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்த பதிவில், “ஹாய் ட்விட்டர், நான் 2006 இல் ஹவாய் பகுதியில் ஒரு இரவு விருந்தின் போது இந்த பெண்ணை சந்தித்தேன். அந்த இரவில் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தோம், அவளை கண்டுபிடிக்க நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்”.
Heard you were looking for me~ pic.twitter.com/Dz4z1wapRv
— heii (@heii_tree) November 24, 2018
“ஏனெனில் அவளை நான் இழக்கிறேன். இப்போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்க்க வேண்டும். தயவுசெய்து இதை மறுட்வீட் செய்து, அவளை மீண்டும் பார்க்க உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மறுட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இது ஒரு கட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களால் பகிரப்பட்டிருந்தது.
OMG OMG HEY GIRL HEY GIRL HEY!! https://t.co/elWi5t1bPq
— Bri ? (@briannacry) November 24, 2018
இதன் விளைவாக பதிவிடப்பட்ட 11 மணி நேரத்திலே, கலிபோர்னியாவை சேர்ந்த ஹெய்டி என்ற பெண், தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலாவை கழித்த புகைப்படத்தினை பதிவிட்டு, “நீ என்னை தேடுகிறாய் என கேள்விப்பட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து பிரையன்னா ஒருபுறம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க, நெட்டிசன்கள் பலரும் இருவரின் நட்பினை பாராட்டி கண்ணீர் விடும் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களின் பேசிய பிரையன்னா, விரைவில் இருவரும் மீண்டும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அன்று இரவில் அணிந்திருந்த ஆடையினை ஹெய்டியின் தாய் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.






