பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் காமிராவில் எப்பொழுதுமே அழகான ஜொலிப்புடன் இருக்க காரணாம் அவருடைய கைப்பையில் வைத்திருக்கும் சில பொருட்களே என அரச குடும்ப எழுத்தாளர் கூறியுள்ளார்.
பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன், வில்லியமை திருமணம் செய்தது முதலே, எப்பொழுது வெளியில் சென்றாலும் கைப்பை ஒன்றினை தன்னுடனே எடுத்து செல்வார்.
பல வருடங்களாகவே ராணி எலிசபெத், கைப்பையில் என்ன வைத்திருக்கிறார் என சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அரச குடும்ப எழுத்தாளர் மார்சீயா மூடி, இளவரசி கேட் அவருடைய கைப்பையில் என்ன வைத்திருக்கிறார் என்பது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கேட்டின் வாழ்க்கை வரலாறு பற்றி அவர் எழுதி வரும் புத்தகத்தில், கேட் எப்பொழுதுமே அவருடைய கைப்பையில் முக்கியமான 4 பொருட்களை எடுத்து செல்வதுண்டு.
முதலாவதாக, எல்லா பெண்களையும் போல ஒரு சிறிய கண்ணாடி வைத்திருப்பார். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக எல்லா கேமராக்களுக்கும் ஏற்றவாறு தன்னுடைய முகம் இருக்கிறதா என்பதை அதில் பார்த்து கொள்வார்.
இரண்டாவதாக அவரது பையில் ஒரு லிப்ஸ்டிக் இருக்கும். தன்னை யாரும் உலர்ந்த உதடுகளுடன் பார்க்க கூடாது என்பதற்காக அதனை வைத்திருக்கிறார்.
மூன்றாவதாக ப்ளோட்டிங் காகிதம் வைத்திருப்பர். காமிரா முன்பு சிரித்த முகத்துடன் தோன்று பொழுதோ அல்லது தலைவர்கள் யாரையாவது சந்திக்கும் பொழுதோ தன்னுடைய முகத்தில் எண்ணெய் அல்லது வியர்வை இருக்க கூடாது என்பதை சரிசெய்வதற்காக அதனை பயன்படுத்துவார்.
அதனை தொடர்ந்து நான்காவதாக ஒரு கைக்குட்டையை வைத்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.






