நான் இப்பொழுது சந்தோசமாக இறப்பேன்: ரசித் கானுக்காக இங்கிலாந்து பெண் வீரர் எடுத்த முடிவு

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் தனக்கு மிகவும் பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் என கூறியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலரிடையே மிகவும் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் ரசித்கான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரராக இருந்தாலும் ரசிகர்கள் பலருக்கு பிடித்தமான வீரராக இருந்து வருகிறார்.

இவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் எந்த பதிவை வெளியிட்டாலும், ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என ரசித்கானிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்திருந்த ரசித், இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் என பதிலளித்திருந்தார்.

இதனை பார்த்த சாரா, ‘நான் இப்பொழுது சந்தோசமாக இறப்பேன்’ என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உடனே அதற்கு மீண்டும் பதிலளித்த ரசித், இறந்துவிடாதீர்கள் என கூறியுள்ளார். இந்த பதிவானது தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.