பல சாதனைகள் படைக்கும் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டி!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் இந்தியா ரசிகர்களிடையே மிகுந்த ஏதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், டி20 தொடரின் முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், டக்ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

இதையடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து, இறுதியில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணி 17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது.

இந்நிலையில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடக்கிறது. இந்த போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்த பட உள்ளது.

1. இந்தியா பவுலர்கள் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் இந்தாண்டில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுப்பார்கள்.

2. இந்தியா பேட்ஸ்மேன்கள் இன்னும் 6 பவுண்டரிகள் அடித்தால் 1400 பவுண்டரிகள் அடித்து டி20 போட்டிகளில் மூன்றாவது இடம் பிடிக்கும். இதில் பாகிஸ்தான், இலங்கை என முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

3. இந்தியா வீரர் ரோஹித் சர்மா இன்னும் 4 சிக்ஸர் அடித்தால், டி20 போட்டிகளில்100 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடம் பிடிப்பார்.

4. ஆஸ்திரேலியா வீரர் மெக்ஸ்வெல்லின் 50வது டி20 போட்டியாகும்.

5. இந்தியா அணி வீரர்கள் 166 ரன்கள் எடுத்தால், 3000 ரன்களை கடந்து
டி20 அரங்கில் இரண்டாவது இடம் பிடிக்கும். முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

6. இந்தியா பவுலர் சஹால் 6 விக்கெட் கைப்பற்றினால், 50 விக்கெட்டுகள் கைப்பற்றுவார்.