3 பெண்களை கதறக்கதற கற்பழித்த பாதிரியார்.! பொங்கியெழுந்த நீதி….!

தென்கொரியாவில் உள்ள அந்நாட்டின் தலைநகரான சியோலில் நகரில்., மீமின் மத்திய தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பாதிரியாராக லீ ஜே ராக் (75) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த தேவாலயமானது 1982 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது வெறும் 12 நபர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில்., தற்போது இந்த தேவாலயத்தில் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் நபர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்த ஆலயத்தில் உறுப்பினராக இருந்த 3 பெண்கள் பாதிரியார் லீ தங்களை அவரின் குடியிருப்பிற்கு அழைத்து சென்று கற்பழித்ததாக புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில்., பெண்கள் கூறியதாவது, அவர் கடவுள் என்பதால் அவர் கேட்டதை எங்களால் வழங்காமல் இருக்க இயலவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து பாதிரியார் லீ இடம் கேட்ட போது நான் அவர்களை கற்பழிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இவர்களை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது அந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது., இதனையடுத்து பாதிரியார் லீயின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த பாதிரியாருக்கு சுமார் 15 வருடத்தில் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளித்தனர்.