அவுஸ்திரேலியாவில் நடுவானில் விமானப்பெண்ணின் இடுப்பை தடவி , போன் நம்பர் கேட்டு தொல்லை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியர் பரஞ்சாபே நிரஞ்சன் ஜெயந்த், நடுவானில் வைத்து விமானப்பெண்ணிடம் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என கூறியுள்ளார்.
அதற்கு அப்பெண் நன்றி என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் எழுந்து அவர் அருகில் சென்ற ஜெயந்த், இடுப்பைப் பிடித்து தடவியுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட பணிப்பெண், இது குறித்து மேற்பார்வையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் இருக்கும் போது, அவரிடம் சென்று போன் நம்பரை கேட்டுள்ளார் ஜெயந்த். அவர் புன்னகைத்துக் கொண்டே போய்விட்டார். பிறகு அடிக்கடி சென்று போன் நம்பர் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
இதையடுத்து சாங்கி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும் விமான நிலைய பொலிசில் புகார் செய்யப்பட்டது.
போதையில் தவறு செய்துவிட்டேன். இதற்காக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட் டேன் என்று அங்கு தெரிவித்தார் ஜெயந்த். இதையடுத்து அவருக்கு மூன்று வாரம் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.






