விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி இந்திய அமைதிப்படை கூறிய விடயம்!

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள். இவர்கள் 2009 ஆம் ஆண்டுடன் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டனர்.

இவர்களின் வரலாறு மிகவும் ஆழமான விடயங்களை கொண்டது. இந்த அமைப்பின் உருவாக்கத்தில் இருந்து அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் இந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

விடுதலை புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுத போரை நடத்தி வந்த வேளையில் 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை நிலை நாட்ட இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

எனினும் இலங்கை வந்த இந்திய படைகள் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பல கொடுரமான தாக்குதல்களை நிகழ்த்தி வந்த காரணத்தால் விடுதலை புலிகள் அமைப்பு இந்திய இராணுவம் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

பல வியுகங்கள் அமைத்து விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய முயன்ற இந்திய இராணுவத்தினர் பல வகையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

ஆனால் ஒவ்வொரு தடவையும் விடுதலை புலிகள் எதிர் தாக்குதல் நடத்தி இந்திய படைகளை நிலை குலைய செய்திருந்தனர்.

இதன் காரணமாக பல இழப்புகளை சந்தித்த இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற தீர்மானிக்கப்பட்டது.

இந்திய அமைதி படை புலிகளிடம் தோல்வி அடைந்த பின்னர் வெளியேறிய போது நிரூபர்களால் பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்று இந்திய அதிகாரி எஸ். சி. சர்தேஸ்பாண்டே அவர்களிடம் கேட்கபட்டது.

அதற்கு எஸ். சி. சர்தேஸ்பாண்டே சொன்னது :

“ஈழத்தில் பிரபாகரன் காலந்தவறிப் பிறந்துவிட்டார். சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது..! என நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.