தமிழகத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தஞ்சை, நாகை, புதுகோட்டை 7 மாவட்டங்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த புயலால் 150000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. சுமார் 30000 மின் கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு இல்லாமல் மக்கள் போராடி வருகின்றனர்.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கஜா என்ற சூறாவளி புயலால் இதுவரை 49 பேரைப் பலி கொண்டுள்ள கஜா புயல், மேலும், பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் இந்த புயலின் காரணமாக இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித நிவாரணமும் இன்னும் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவை எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் மக்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லாமலும், இரவில் மின்சாரமும் இல்லாமலும் முகாம்களில் தங்கவைக்க பட்டுள்ளனர்.
இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்டிருந்த கஜா புயல் நிவாரண முகாமில் சமைப்பதற்காக தமிழக அரசு அரிசி வழங்கியுள்ளது. அரசு வழங்கிய அரிசி சமைக்க கூட முடியாத வகையில் புழுத்துப் போய் கட்டிக் கட்டியாக இருப்பதை கண்ட மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
“ஊருக்கே சோறுபோட்ட சோழ வளநாடு”, என போற்றப்பட்ட தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களுக்கு இது போன்ற நிலைமையா? என்கிற எண்ணம்தான் அனைவருக்கும் தோன்றுகிறது. இந்த நிவாரண முகாம்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை, சமூக வலைத்தளங்களில் அரசின் மீது கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.






