இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகி வருபவர் ரீனா அகர்வால். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ” கியா ஹால் மிஸ்டர் பாஞ்சால் ” என்ற தொடரில் நடித்து கொண்டிருந்தார்.
அந்த தொடர் படமாக்கப்பட்ட படப்பிடிப்பு அரங்கிற்குள் நுழைந்த நாயானது., தீடீரென அவரை கடித்தது. இதனை கண்ட அங்குள்ள உதவியாளர்கள் மற்றும் குழுவினர் அவரை நாயிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் மருத்துவ செலவுக்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பணம் ஏதும் தராததால்., தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவரிடம் கேட்கையில்., “கியா ஹால் மிஸ்டர்” படப்பிடிப்பு அரங்கில் நுழைந்த நாய் என்னை கடித்தது., அங்கிருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போலவே., தயாரிப்பாளர் நடந்துகொண்டார்.
சிகிச்சைக்காக அவர் தற்போது வரை பணம் ஏதும் வழங்காததால் படப்பிடிப்பில் இருந்து விலகினேன்., அதற்கு அனைவரும் நாய் கடிதத்தின் காரணமாக விலகிவிட்டதாக தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.






